Advertisment

"மகிழ்ச்சியின் புதிய சகாப்தத்தில் நாம் காலடி எடுத்து வைக்கிறோம்" - குஷ்பூ நம்பிக்கை!

cfsCsCs

Advertisment

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகதடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகை குஷ்பூ கரோனா 2ஆம் அலை குறித்து சமூகவலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதில்... "இன்றுமுதல் (01.06.2021)) மகிழ்ச்சியின் புதிய சகாப்தத்தில் நாம் காலடி எடுத்து வைக்கிறோம் என்று நம்புவோம். வலி, துக்கம், கண்ணீர் மற்றும் பயங்கரமான கரோனா வைரஸை விரட்டுவோம். கவனமாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். கரோனா தொற்றை போராடி வெல்வோம்" என பதிவிட்டுள்ளார்.

actress kushboo kushboo
இதையும் படியுங்கள்
Subscribe