Advertisment

"உங்களுக்கு வந்தா அது இரத்தம், எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி??" - குஷ்பூ கிண்டல்!

bhhdhd

கரோனா தடுப்பு நடவடிக்கையாகதமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். கரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்குப் பொதுமக்களும் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து நடிகை குஷ்பூ ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "எல்லாவற்றையும்விட டாஸ்மாக் மிக முக்கியமானதா.. ஆஹா!! என்ன ஒரு சிந்தனை!! உங்களுக்கு வந்தா அது இரத்தம், எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி?? தயவுசெய்து எங்களுக்குப் பதில் சொல்லுங்கள் மாண்புமிகு முதல் அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களே" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

kushboo
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe