/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/96075857_3112100728835601_1806120299670111861_n.jpg)
இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இதற்கிடையே பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கும், சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கும் சினிமா பிரபலங்கள் உதவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தானும், தன் கணவரும் செய்துவரும் உதவிகள் குறித்து நடிகை குஷ்பூ சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்..
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
''இந்தத் தொற்று சூழ்நிலையில் நான் மற்றவர்களுக்கு என்ன உதவி செய்தேன் என்று மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நானும் என் கணவரும் எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்கிறோம். இன்றும் அவ்வாறு செய்துகொண்டே இருக்கிறோம். மற்றவர்களிடம் நன்மதிப்பைப் பெற நாங்கள் தம்பட்டம் அடிக்க தேவையில்லை. அந்த ஏழை ஆத்மாக்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கிறது, அதுவே எங்களுக்குப் போதுமானது. இதை என் வாழ்நாள் முழுவதும் எடுத்துச் செல்வேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)