Skip to main content

"அவரே வேறுபடுத்தாதபோது, ​​நாம் யார் பாகுபாடு காட்ட?" - குஷ்பூ கேள்வி!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
jdjd

 

 

கர்நாடக மாநிலம், புலிகேஷி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் மதரீதியிலான விமர்சனம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த சமூக வலைதள பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூடிய ஒரு கும்பல், எம்.எல்.ஏ.வின் வீட்டை தாக்கியதோடு வாகனங்களுக்கும் தீ வைத்தது. சம்பவம் அறிந்து இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். டி.ஜே. ஹள்ளி, கே.ஜே.ஹள்ளி எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு மேற்கொண்ட நிலையில், இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகினர். 

 

அதேபோல் போலீஸ் காவல் ஆணையர் உட்பட 60 பேர் இந்த கலவர சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். சர்ச்சைக்குரிய பதிவினையிட்ட எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கலவரத்தில் ஈடுபட்ட  110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கலவரம் குறித்து பல்வேறு திரை பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பூ இக்கலவரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"எந்தவொரு வன்முறையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். பெங்களூரில் நடந்த கலவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதியைக் கொண்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். கடவுளின் பார்வையில் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள். அவரே வேறுபடுத்தாதபோது, ​​நாம் யார் பாகுபாடு காட்ட? விரைவில் அமைதியும் இயல்பு நிலவும் என்று நம்புகிறேன். #பத்திரமாகஇருங்கள். #பெங்களூருவன்முறை" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சர்ச்சையான குஷ்புவின் பேச்சு; உருவப்படத்தை எரித்து போராட்டம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle in Trichy against Kushboo speech

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும் கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டபோராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருச்சியில் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். அப்போது குஷ்புஉருவ படத்தை கிழித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில் மண்டலக் குழு தலைவர் துர்கா தேவி, மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, கவுன்சிலர் மஞ்சுளா தேவி, பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோல், திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமை வகித்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, விசாலாட்சி உள்ளிட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர். இதில் குஷ்பு உருவ படத்தை எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.