gds

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்ற நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் போன்ற துறைகளில் எந்தவித ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருந்தது.

Advertisment

Advertisment

இதையடுத்து வெள்ளித்திரையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற அனுமதியும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு தற்போது சின்னத்திரைக்கு வழங்கிய அனுமதியில் மொத்தமாக 60 பேர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் எஸ்.வி சேகர் கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில்...

''இன்றய சூழலில் தொலைக்காட்சித்தொடரில் 10 வயதுக்குள், 60 வயதுக்கு மேல் பணியாற்ற கூடாது என அரசின் அறிவிப்பு வந்துள்ளதா⁉️'' என அவர் எழுப்பிய கேள்விக்கு நடிகை குஷ்பூ, ''ஐயா, நீங்கள் இதில் எந்த வகை வயதினருக்குள்ளும் பொருந்தவில்லை. எனவே நீங்கள் ஓய்வெடுக்கலாம்'' எனச்சமூகவலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார்.