உலகம் முழுக்க கரோனா அச்சத்தால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சைமன் கரோனாவால் இறந்துவிட்டார். அவருடைய உடலைப் புதைக்கவிடாமல் ஒருசிலர் போலீஸாரிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்குப் பலர் தங்களின் கண்டனக் குரல்களை எழுப்பினார்கள். உடலைப் புதைக்கவிடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisment

kushboo

இதனையடுத்து நடிகர் விஜயகாந்த், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நிலம் தரவில்லை என்றாலோ, பிரச்சனை செய்தாலோ தன்னுடைய சொந்தக் கல்லூரியில் இடம் தருகிறேன் என்று அறிவித்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தவர்களைக் கடுமையாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு காட்டமாகட்வீட் செய்துள்ளார்.

அதில், "நாம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறோம்? நம் சக மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒருவர் தன் உயிரை விட்டிருக்கிறார். படிப்பறிவில்லாத அல்லது ரவுடிகள் அல்லது குண்டர்கள், எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கூட்டம் தடுத்துள்ளது.

Advertisment

http://onelink.to/nknapp

இது போன்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். அவரிடம், அவர் குடும்பத்திடமும் நாம் மன்னிப்பு கோர வேண்டும். மரணம் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதரும் உரித்தானவரேஆனால் அதை அவரது ஆன்மாவுக்கு நாம் செய்யவில்லை. என்றும் நாம் குற்ற உணர்வுடன் இருப்போம்"என்று தெரிவித்துள்ளார்.