கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவுமே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 25 லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

kushboo

கடந்த வாரத்திலிருந்து இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால்தான் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார் பிரதமர் மோடி. வீட்டிலிருக்கும் திரைத்துறை பிரபலங்கள் பலர், போர் அடிக்காமல் இருக்க எதாவது புதிதாக ஒரு சமையலை செய்து, அதை அழகாக புகைப்படமோ, வீடியோவோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் அவ்வாறு பதிவிடுபவர்களுக்கு வேண்டுகோள்விடும் வகையில் குஷ்பு பதிவிட்டுள்ளார். அதில், "தாங்கள் சமைத்ததாகக் கவர்ச்சிகரமான உணவின் புகைப்படங்களைப் பலரும் பதிவிடுவதை பார்க்கிறேன். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், நம் வீட்டில் உணவு சமைக்கப்படுகிறது. இந்தக் கொடுமையான சூழலில் ஒரு வேளை உணவுக்குப் பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குசிறிது ஒத்துழைப்பை வழங்குவோம்.சாப்பிடுங்கள், ஆனால் அவற்றை காட்சிப்படுத்தாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.