Advertisment

"கண்டிப்பு இல்லாத பசங்க கெட்டு போய்டுவாங்க சார்" - எச்சரிக்கும் குருதி ஆட்டம்

kuruthi aattam trailer out now

Advertisment

கடந்த 2017ஆம் ஆண்டு ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அதர்வாவை வைத்து 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c60c2e39-6a66-4f06-ad42-baad10d31b56" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_16.jpg" />

இந்நிலையில் குருதி ஆட்டம் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஜானரில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் ஆசிரியராக வரும் பிரியா பவானி சங்கர் கண்டிப்பு இல்லாத பசங்க கெட்டு போய்டுவாங்க என்று பேசுகிறார்.தற்போது உள்ள பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால் ஏகப்பட்ட பிரச்சனையில் போய் முடியும் சூழலில் குருதி ஆட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனம் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது.

Advertisment

kuruthi aattam
இதையும் படியுங்கள்
Subscribe