Advertisment

'குருதி ஆட்டம்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

kuruthi aattam movie release date announced

கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அதர்வாவை வைத்து 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில், 'குருதி ஆட்டம்' திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

adharva kuruthi aattam priya bhavani shankar yuvan shankar raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe