/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/150_9.jpg)
ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பில், இயக்குநர் என்.டி. நந்தா இயக்கத்தில் உருவாகும் படம் ‘குறுக்கு வழி’. இது, ‘வல்லதேசம்’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் என்.டி. நந்தா இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாகும். இப்படத்தின் நாயகனாக துர்வா நடிக்க, அவருக்கு ஜோடியாக சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். கவிஞர் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. கவிஞர் சினேகன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் பூஜை நிகழ்வில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)