இயக்குனர் டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் 'சொன்னால்தான் காதலா', 'காதல் அழிவதில்லை' உள்ளிட்ட சில படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாகவும், சிறுவனாகவும் அறிமுகமானார். இதையடுத்து இவர் சிம்பு - நயன்தாரா இணைந்து நடித்த 'இது நம்ம ஆளு' படத்தின் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இந்நிலையில் குறளரசன் தன் பெற்றோர்கள் முன்னிலையில் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவர் இஸ்லாம் மதத்தில் மாறும் வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் இது குறித்து விளக்கமளித்த தந்தை டி.ராஜேந்தர்.... "குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது இஷ்டம். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். நானும் எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் என்பதால் இதற்கு ஆதரவு தெரிவித்தேன். மேலும் எனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் எம்பளத்தில் அனைத்து மதத்தின் குறியீடுகளையும் கொண்டுதான் வடிவமைதந்துள்ளேன். என் மகன் குறளரசன் மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாத்துக்கு மாறினார். அவர் விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ளவும் ஜமாத்தில் கூறியுள்ளனர்" என்றார்.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/W-H0pEHB-FM.jpg?itok=uhc47hwy","video_url":" Video (Responsive, autoplaying)."]}