prabhu salomon

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கடந்த 2012 ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் புதுமுகங்களாக அறிமுகமான 'கும்கி' படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரபுசாலமன் இயக்கத்தில் 'கும்கி 2' படம் உருவாகி வருகிறது. நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாக வில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி,சூசன், கோலங்கள் திருச்செல்வம்,ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன்,மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'இதயக்கனி' படப்பிடிப்பிற்கு பிறகு 'கும்கி 2' படப்பிடிப்பு தான் அங்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் குறித்து பிரபு சாலமன் பேசும்போது.... "இந்த படத்திற்காக இரண்டு விஷயங்களில் சிரமப் பட்டோம். ஒன்று யானை, அது கிடைத்து விட்டது. மற்றொன்று படத்தின் நாயகி, இன்னும் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம். நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகிறோம்" என்றார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment