/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/108_4.jpg)
இயக்குநர் ராஜேஷ் இயக்கிய 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை மதுமிதா. அப்படத்தில் அவர் நடித்திருந்த ஜாங்கிரி கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மதுமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். இந்த நிலையில், தமிழக அரசு நடிகை மதுமிதாவிற்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், மதுமிதா விருது பெற்றதை 'கும்பாரி' படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதுகுறித்து மதுமிதா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'நான் விருது வாங்கியதைக் கேக் வெட்டிக் கொண்டாடிய 'கும்பாரி' படக்குழுவினருக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)