பிரபல ஹிந்தி சீரியலான கும்கும் பாக்யாவில் நடித்து பிரபலமான நடிகை திருப்தி ஷங்த்தார். இவருக்கு வயது 21. தனது தந்தை மிகவும் கொடுமை படுத்துவதாக போலீசில் புகாரளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
பரேலி காவல் நிலையத்தில் அவரது தந்தை ராமன் குறித்து பதிந்த புகாரில் 29 வயதான நபரை திருமணம் செய்துகொள்ள மிகவும் கொடுமை படுத்துகிறார். அப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனக்கும் தனது தந்தைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று செய்துவிட்டு, அம்மாவுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் திருப்தி.