kuldeep yadav meets rajinikanth

Advertisment

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. மூன்றாவது போட்டி வருகிற 22ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனிடையே நேற்று மும்பைவான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியைநடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று கண்டு ரசித்தார். இந்த நிலையில் ரஜினியை சந்தித்து பேசியதாக இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின்சுழற்பந்து வீச்சாளரானகுல்தீப் யாதவ்நேற்று நடந்த போட்டியில் 8 ஓவர்களை வீசி 48 ரன்களை கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தனது 170வது படத்தில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.