Kudumbasthan manaikandan movie trailer released

குட் நைட், லவ்வர் படத்திற்கு பிறகு லீட் ரோலில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘குடும்பஸ்தன்’. சினிமாக்காரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்பத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். இப்படத்தில் மணிகண்டனைத் தவிர்த்து சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வைசாக் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் மையக்கரு ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே எனத் தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், விரைவில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

Advertisment

இந்த நிலையில் படத்தின் ட்ரைலரும் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரைலரை பார்க்கையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கதாநாயகனும் கதாநாயகியும் திருமணம் செய்து கொள்கின்றனர். பின்பு கதாநாயகன் குடும்பஸ்தனாக மாற, ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் எதிர்வரும் சவால்களை எப்படி கையாள்கிறான் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பதாக தெரிகிறது. இப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.