/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/400_92.jpg)
குட் நைட், லவ்வர் படத்திற்கு பிறகு லீட் ரோலில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘குடும்பஸ்தன்’. சினிமாக்காரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்பத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் மணிகண்டனைத் தவிர்த்து சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வைசாக் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் மையக்கரு ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே எனத் தெரிவிக்கப்பட்டது. கோவை பின்னணியில் இப்படம் எழுதப்பட்டு மடமாக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் வெளிநாடுகளிலும் வெளியாகவுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வளைகுடா ஆகிய நாடுகளில் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஐய்ங்கரன் இண்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிடுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)