/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/116_44.jpg)
தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை தனுஷ் தனது மகனுடன் சென்று ரசிகர்களுடன் பார்த்தார். பின்பு பட இயக்குநர் சேகர் கம்முலாவும் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். இப்படத்திற்கு சாய் பல்லவி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் படம் வெற்றி பெற தங்களது எக்ஸ் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் மொத்த படமும் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி இன்னும் இரண்டு நாள் கூட முடிவடையாத நிலையில் இது போன்று நடந்துள்ளது, படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)