Advertisment

"எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும்" - கே.எஸ்.ரவிக்குமார்

ks ravikumar speech at azhagiye kanne event

எஸ்தெல் என்டர்டெய்னர் (Esthell Entertainer) நிறுவனம் தயாரிப்பில்அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில்லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அழகிய கண்ணே'. இப்படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரரானR.விஜயகுமார்இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள,பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்வில் நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது, "என்னைப் பற்றி இப்போதும் நீங்கள் எழுதுகிறீர்கள். என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுக்கு என் நன்றிகள். கே.எஸ்.ரவிக்குமார் சார் ரசிகை நான்.நீங்கள் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. நாயகன் சிவா ஃபேமிலி எப்போதும் செட்டில் இருப்பார்கள். என் அம்மாவிடம் என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக்கொள்கிறார்கள் என்றேன். ஷூட்டிங் அனுபவம் அப்படி தான் இருந்தது. லியோனி சார் பழக மிக இனிமையானவர். எனக்கு மிக முக்கியமான பாத்திரம்.ஐடியில் வேலை பார்க்கும் சென்னைப் பெண்.என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். ஒரு உதவி இயக்குநரின் வாழ்வை இந்தப் படம் மூலம் அறிந்துகொள்வீர்கள். ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்" என்றார்.

Advertisment

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது, "பள்ளிக்காலத்திலிருந்தே லியோனி சார் ரசிகன் நான்.அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிபேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும். இயக்குநர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது. மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார். படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். நாயகன் சிவா அவரிடம் பேச்சில் தெரியும் பணிவுஅவரின் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைய வேண்டும். படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது. லியோனி சார் யார் மனதையும் காயப்படுத்தாதவர். அவர் மனது போலவே படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe