ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள "மாளிகை'' படத்தை தில்.சத்யா எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது....

ks ravikumar

Advertisment

''இந்தப்படத்தின் இயக்குனர் தில் சத்யாவிற்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் ஹீரோ ஜே.கே அழகாக இருக்கிறார். ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முக திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் வெளியான தரமணி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் அவர் நன்றாக நடித்திருக்கிறார்'' என்றார்.