Advertisment

பிரஷாந்த் படத்தில் இணைந்த கே.எஸ் ரவிக்குமார்!

vdgdsbs

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் 'அந்தாதுன்'. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் இதை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக சித்தார்த், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் உரிமத்தைப் பெற முயற்சித்தார்கள் என அப்போது தகவல் வெளியானது. 'தி பியானோ டியூனர்' என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்ட 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பலத்த போட்டிக்கு மத்தியில் நடிகர் பிரஷாந்த் கைப்பற்றினார்.

Advertisment

bgfhfdsbd

'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடிக்கிறார். இப்படத்தை நடிகர் பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லியாக தபு நடித்த வேடத்தில் சிம்ரன் நடித்துள்ளார். நாயகியாக, ராதிகா ஆப்தே வேடத்தில், பிரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் இயக்குனர், நடிகர் கே.எஸ் ரவிக்குமார் கலந்துகொண்டு டப்பிங் பேசிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

andhagan Prashanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe