Advertisment

தம்பியுடன் இணைந்து ரஜினி பட இயக்குநருடன் கைகோர்த்த ராகவா லாரன்ஸ் !

ks ravikumar direction  starring raghava lawrence elvin

Advertisment

நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் நடன இயக்குநராக இருக்கிறார். இவர், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த 'காஞ்சனா 2' படத்தின் அறிமுக பாடலில் தன்சகோதரருடன் நடனமாடியுள்ளார். இந்நிலையில், எல்வின் லாரன்ஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, 'படையப்பா', 'முத்து', 'அவ்வை சண்முகி' உள்ளிட்ட பல வெற்றி படங்களைக் கொடுத்த கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் எல்வின் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ.ஆர். என்டர்டெய்மென்ட்உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். அதிரடி ஆக்சன், எமோஷன்கலந்த ஒரு கமர்ஷியல் படமாக இப்படம் தயாராகவுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்துவரும் படக்குழு, விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

actor raghava lawrence
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe