/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1049.jpg)
'ஃபைவ்ஸ்டார் கிரியேக்ஷன்' சார்பாக கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக் கட்டபணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சகோதரர் எல்வினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க, ட்ரென்ஸ்ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு கே.எஸ் ரவிக்குமார் தமிழ் படம் இயக்கவுள்ளதால்இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்தஅறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)