style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
'தரமணி' படத்திற்கு இயக்குனர் ராம் தற்போது 'பேரன்பு' படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டி - அஞ்சலி இணைந்து நடித்திருக்கும் இப்படத்தில் இளம் நடிகை சாதனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்ற இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் படத்தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் குறித்து பேசியபோது... "தயாரிப்பாளர் தேனப்பன் இதுவரை எடுத்தது எல்லாம் ஒரு படமே இல்லை. இது தான் படம். இதன் ஒரிஜினல் டிவிடியை வாங்கி பொக்கிஷமாக எல்லோரும் வீட்டில் வைத்திருக்க வேண்டும்" என்றார். இதற்கடுத்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மிஷ்கின் குறிப்பிட்டதை குறித்து பேசியபோது... "தேனப்பன் 'பஞ்சதந்திரம்' என்ற படத்தையும் தயாரித்துள்ளார். அதுவும் பலரின் வீட்டில் உள்ள ஒரு படம் தான். கமர்ஷியல் படங்கள் இருந்தால் தான் கலை படங்களையும் பிரித்து பார்க்க முடியும். வெறும் கலைப்படம் மட்டுமே ஒரு சினிமாவை வாழ வைக்க முடியாது. கமர்ஷியல் படங்களும் வேண்டும், அதற்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது" என கருத்து மோதலுக்கு பதிலடி கொடுத்தார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">