Advertisment

“நீங்க யார் சார் சொல்லுறதுக்கு” - கமலிடம் திட்டவட்டமாக சொன்ன கே.எஸ்.ரவிகுமார்

ks ravikumar about kamalhassan ulaganayagan name

சென்னையில் மறைந்த புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர் கிரேசி மோகன் எழுதிய நாடகங்கள், வசனங்கள், சிறு கதைகள் என மொத்த 25 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை வெளியிடும் நிகழ்ச்சில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கிரேசி மோகனின் தம்பி மாது பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிகுமார் பேசுகையில் கிரேசி மோகன் குறித்தான தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். பின்பு கமல் குறித்து பேசிய அவர், கமல் கூப்பிட வேண்டாமென சொன்னாலும் நாங்க உலகநாயகன்னு தான்கூப்பிடுவோம் என சொன்னார். அவர் பேசியதாவது, “அஜித், தன்னை யாரும் இனிமே தலன்னு கூப்பிடாதீங்க. ஏ.கே-னு கூப்பிடுங்கன்னு சொன்னார். ஆனால் அவருடைய அடுத்த படத்தில் அவரை தல தலன்னு தான் படம் முழுக்க கூப்பிடுறாங்க. அதில் அவரும் நடிச்சு டப்பிங்கும் பண்ணியிருக்கார். அதனால் அப்படி கூப்பிடுவதை மாத்தவே முடியாது.

Advertisment

அதே மாதிரிதான் உலக நாயகன்னு என்னை கூப்பிடாதீங்கன்னு கமல் சொன்னார்” என்று பேசிக்கொண்டிருந்த ரவிக்குமார், திடீரென்று மேடையில் இருந்த கமல்ஹாசனை பார்த்து, “நீங்க யார் சார் அதை சொல்லுறதுக்கு, நாங்க கூப்பிடுவோம். இது ஒரு தலை காதல் மாதிரி, நீங்க காதலிக்கலைன்னா விடுங்க, நாங்க காதலிக்குறோம். எங்களை நீங்க தடுக்க முடியாது. இப்போது விண்வெளி நாயகன்னு மணிரத்னம் சொல்லியிருக்கார். இதை தவிர்த்து வேறு பட்டமே இல்ல” என்றார்.

ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe