Advertisment

தனுஷுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை

kriti sanon to pair with dhanush in new movie

ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் ஏராளமான படங்கள் வைத்துள்ளார்.

Advertisment

இதில் ஆனந்த் எல்.ராய் படம் அவர்கள் கூட்டணியில் 2013 ஆம் ஆண்டு வெளியான 'ராஞ்சனா' படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein) என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நிலையில் அதில் இந்தாண்டு இப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Bollywood actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe