/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/459_3.jpg)
'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்துநடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.ஏற்கனவே இவர்கள்கூட்டணியில் வெளியான 'பிதாமகன்', 'நந்தா' ஆகிய இரு படங்களும்பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா பாலா இணையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.மேலும்இப்படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பேசவுள்ளதாககூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை க்ரித்தி ஷெட்டிநடிக்கஉள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதனைபடக்குழு உறுதி செய்துள்ளது. நடிகை க்ரித்தி ஷெட்டிதெலுங்கில் ஹிட்டடித்த 'உப்பென்னா'படத்தில் விஜய் சேதுபதியின் மகளாகநடித்திருந்தார். அறிமுகமான முதல் படத்திலேயே பலரின் கவனத்தை பெற்ற க்ரித்தி ஷெட்டி நானியுடன் 'ஷ்யாம் சிங்க ராய்' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சூர்யா 41 படத்தில் நடிப்பதன் மூலம் முதல் முறையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)