Krithi Shetty make his kollywood entry with jayam ravi movie

Advertisment

ஜெயம் ரவி, 'அகிலன்' படத்தைத்தொடர்ந்து தற்போது 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே அஹமத் இயக்கும் 'இறைவன்' படத்தில் நடித்துள்ளார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28 ஆம் தேதி (28.04.2023) வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரோமோஷனில் படு பிசியாக படக்குழு இறங்கியுள்ளது.

இதையடுத்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் 18 மொழிகளில் வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும்அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இப்படத்தை புவனேஷ் அர்ஜுனன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறாராம். இவர் மிஷ்கினிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கவுள்ளதாகவும் படத்திற்கு 'ஜீனி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக தமிழ்த்திரையுலகிற்கு இப்படம் மூலம் அறிமுகமாகவுள்ளார். முன்னதாக சூர்யாவுக்கு ஜோடியாக பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.