பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.ஏற்கனவே இவர்கள்கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய இரு படங்களும்பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா பாலா இணையும் இப்படத்தின் மீதான ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் படத்தின் நாயகி குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை க்ரித்திஷெட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்தெலுங்கில் ஹிட்டடித்த 'உப்பென்னா'படத்தில் விஜய் சேதுபதியின் மகளாகநடித்திருந்தார். அறிமுகமான முதல் படத்திலேயே பலரின் கவனத்தை பெற்ற க்ரித்தி ஷெட்டி நானியுடன் 'ஷ்யாம் சிங்க ராய்' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகை க்ரித்தி ஷெட்டி பாலா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.