Advertisment

மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு களம் இறங்கும் கிருஷ்ணா! 

fhfdh

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மெளனகுரு தயாரிக்கும் படம் ‘ராயர் பரம்பரை’.'கழுகு' புகழ் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டான ‘மரடோனா’, ‘டூ ஸ்டேட்ஸ்’ படங்களின் கதாநாயகி சரண்யா நாயர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், தெலுங்கு பட நாயகி அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

Advertisment

மேலும், கே.ஆர் விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர் மனோகர், கஸ்தூரி, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், டைகர் கார்டன் தங்கதுரை, மிப்பு, கல்லூரி வினோத், சரண்யா, லொல்லு சபா சேசு, ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடிக்க செண்டிமென்ட் கலந்த காமெடி படமாக பொள்ளாச்சியில் தயாராகி உள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் ஒரே கட்டத்தில் டிசம்பர் தொடங்கி பொங்கலுக்கு முன் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Advertisment

Actor krishna
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe