சின்னதிரையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை செய்து பிரபலமானவர் கேபிஒய் பாலா. பின்பு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து பலரது பாராட்டை பெற்றார். வெள்ளித்திரையில் கடந்த 5ஆம் தேதி வெளியான ‘காந்தி கண்ணாடி’ மூலம் நாயகனாக அறிமுகமானார். கடந்த சில தினங்களாக பாலா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அவர் செய்து வரும் உதவிகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் விமர்சனங்களுக்கு பாலா தற்போது வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், “எவ்ளோ வன்மம். நானும் இந்த சர்ச்சை இப்ப முடியும் அப்ப முடியும்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். முடியுற மாதிரி தெரியல. ஒரே ஒரு படம் பண்ணேன். அதுக்கு இந்தளவு பன்னுவாங்கன்னு சத்தியமா தெரியாது. ஒரு ஆம்புலன்ஸில் நம்பர் பிளேட்டால் பிரச்சனை பன்றாங்க. ஆனால் அந்த அம்புலன்ஸால் நிறைய பேர் உதவியடைஞ்சிருக்காங்க. அதையெல்லாம் அவங்க பேசமாட்டாங்க. நம்பர் பிளேட்டில் ஒரே ஒரு ‘டி’ எழுத்து மிஸ்ஸானதால் பாலாவின் முகத்திரை கிழிந்தது, பாலா ஒரு சர்வதேச கைக்கூலின்னு சொல்றாங்க. நான் ஒரு தினக்கூலி.
அதே போல் நான் ஹாஸ்பிட்டல் கட்டுவதை விமர்சிக்கிறாங்க. என்கிட்ட இவ்ளோ பணம் ஏதுன்னு கேட்குறாங்க. நான் நிகழ்ச்சிக்கு போறேன், ஆங்கரிங் பன்றேன், படம் நடிக்கிறேன், விளம்பர படம் பன்றேன்,... என்னுடைய சொந்த காசுல தான் உதவி பன்றேன். நான் வெளிநாடு நிகழ்ச்சிக்கும் போவதால் வெளிநாட்டில் இருந்து பணம் வருதுன்னு சொல்றாங்க. இந்த காலத்துல யார் அப்படி காசு கொடுப்பா. என் வீடு கட்ட வேண்டிய இடத்துல தான், அமுதவாணன் கிட்ட இன்னும் கொஞ்சம் இடம் வாங்கி ஒரு கிளினிக் கட்டுரேன்.
என்னோட பேர கலங்கடிக்குறதுக்காக இப்படி விமர்சிக்கிறாங்க. இப்போ நான் ஏன் வீடியோ போடுறேன்னா, இந்த சர்ச்சையை பார்த்து உதவி செய்ய வரும் இளைஞர்கள் பின்வாங்கி விடக்கூடாது என்பதுக்காக. நான் உதவி செய்வதை யூட்யூபில் போட்டு காசு பாக்குறேன்னு விமர்சிக்கிறாங்க. நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் போடுறேன். இன்ஸ்டாகிராமில் காசு வராது. எனக்கு யூட்யூப் கிடையாது. ஆனா என்னைப் பத்தி தப்பா பேசித்தான் யூட்யூப்ல நிறைய பேர் காசு சம்பாதிக்குறாங்க. பிரச்சனை இருக்குறதுனாலத்தான் நல்லது பன்றோம். ஆனா நல்லது பன்றதுல்லையே ஒரு பிரச்சனை இருக்கான்னு கேட்டா, என்ன சொல்றதுன்னு தெரியல. விமர்சனத்தை பார்த்து நான் ஓடமாட்டேன், எனக்குன்னு மக்கள் இருக்காங்க, அவங்களுக்காக நான் ஓடுவேன்” என்றார்.