/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kspc.jpg)
பிரபல மலையாள நடிகை கே.பி.சி.ஏ லலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான, பரமசிவம், கிரீடம் மற்றும்மாதவன் நடிப்பில் வெளியான அலைபாயுதே, உள்ளிட்ட முன்னணி நடிகர்களின்படங்களில் நடித்துள்ளார். இயக்குநர்சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்'படத்தில் கே.பி.சி.ஏ லலிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்பு அவரது உடல்நிலையில் மோசமடைந்ததால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதுநடிகை கே.பி.சி.ஏ லலிதாஉடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில்இருந்து கூறப்பட்டுள்ளது.
இவர் 1991 மற்றும் 2001 ஆம் ஆண்டிற்கானசிறந்த துணை நடிகைக்கான இரண்டு தேசிய விருதுகள் உட்படபல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)