simbu

Advertisment

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'க/பெ ரணசிங்கம்' படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியானது. புதுமுக இயக்குனர் விருமாண்டி இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஓடிடியில் ஆன் டிமாண்ட் என்னும் முறையில் வெளியிடப்பட்டது. வெளியான நாள் முதல் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை, தற்போதுதான் மத்திய அரசு அக்டோபர் 15 முதல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கலாம் என்று அறிவித்தது.

Advertisment

இதனை அடுத்து, ஓடிடியில் ரிலீஸான‘க/பெ ரணசிங்கம்’ படம் திரையரங்கில் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.