kottukkaali ott update

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை ‘கூழாங்கல்’ பட இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. இருப்பினும் ஜெர்மனி, கனடா, போர்ச்சுக்கல், ஆர்மீனியா, ரஷ்யா உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று சாதனை படைத்தது. மேலும் கமல், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்களின் பாராட்டை பெற்றது.

Advertisment

இப்படம் சிம்ப்ளி சவுத் ஓ.டி.டி. தளத்தில் நாளை(27.09.2024) முதல் இந்தியாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இப்படத்தின் இந்திய ஓ.டி.டி. அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் கொட்டுக்காளி படத்தின் ஓ.டி.டி. அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் நாளை வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தங்களது எக்ஸ் பக்கத்தில் போஸ்டருடன் அறிவித்துள்ளது.