Skip to main content

"என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இதயமே வெடித்திருக்கும்" - கோட்டா சீனிவாச ராவ்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

kota srinivasa rao about his passed away rumours

 

தமிழில் சாமி, திருப்பாச்சி, கோ என பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். மேலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பாஜகவில் இருக்கும் இவர் 1999–2004 ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 75 வயதை கடந்து தற்போது வாழ்ந்து வருகிறார். 

 

இந்த நிலையில், இவர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கோட்டா சீனிவாச ராவ். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் இறந்துவிட்டதாக பரவிய செய்தி வதந்தி. அதனை நம்பி பலரும் தொலைப்பேசியில் அழைத்து விசாரித்தனர். நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். நான் உகாதி பண்டிகைக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த சமயத்தில் இதுபோன்று வதந்திகள் வருகின்றன. 

 

இதே என் இடத்தில் வேறு யாராவது முதியவர் இருந்திருந்தால் அவர் இதயமே வெடித்திருக்கும். புகழ், பணம் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க பல வழிகள் உண்டு. அதற்காக இப்படியான வதந்திகளை பரப்புவது முறையல்ல. இந்த வதந்தி அறிந்து 10 காவல்துறையினர் என் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக வந்தனர். அவர்களிடம் எதிர்காலத்தில் இதுபோன்ற போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க ஏதாவது செய்யுங்கள் என வலியுறுத்தினேன்" என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையில்லாதது' - சிரஞ்சீவி பேச்சிற்கு பிரபல நடிகர் கருத்து

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

 ‘All this is unnecessary at the moment’ - the famous actor commented on Chiranjeevi’s speech

 

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கோட்டா சீனிவாசராவ். தெலுங்கில் பிரபல நடிகரான இவர் தமிழ், இந்தி, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 750 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரஞ்சீவி, "திரைப்பட தொழிலாளர்களுக்காக மருத்துவமனை கட்ட போகிறேன்" என பேசியிருந்தார்.

 

இந்நிலையில் கோட்டா சீனிவாசராவ் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சிரஞ்சீவி பேசியதற்கு தன் கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், "சினிமா தொழிலாளர்கள் மூன்று வேலை உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் மருத்துவமனை கட்டுவது தேவையற்றது. மருத்துவமனைகளைப் பற்றி பேசுவதை விட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கி அவர்களுக்கு வழி காட்டுவது மிக முக்கியமானது. போதுமான பணம் இருந்தால் எந்த தனியார் மருத்துவமனைக்கும் போகலாம். எனவே தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.