oh in hye

பிரபல தென்கொரிய நடிகை ஓ இன் ஹை இன்று காலை அவரது இல்லத்தில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை மீட்ட போலீஸார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Advertisment

ஆம்புலன்சில் அவருக்கு சி.பி.ஆர். உள்ளிட்ட அவசர சிகிச்சை முறைகள் அளிக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதலில் தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் போலீஸார் விசாரித்தனர்.

Advertisment

அதன்பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை அவருடைய இறுதி அஞ்சலி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

36வயதாகும் இளம் நடிகை, கடந்த 2011ஆம் ஆண்டு தென்கொரிய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இதன்பின் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.