/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/koozhangal.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களைத்தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளனர் . அறிமுக இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்குயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதலில் வேறு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுவந்த கூழாங்கல் திரைப்படம் பிறகு ரௌடி பிக்சர்ஸ்நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கியுள்ள இப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் ரேஸிலும் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில் 'கூழாங்கல்' திரைப்படம் கோவாவில் வரும் 20 தேதி நடைபெறவுள்ள சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இப்படத்தை போலவே இயக்குனர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கத்தில் வெளியான 'ஸ்வீட் பிரியாணி' குறும்படமும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இயக்குனர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கிருந்த டூ லேட் குறும்படமும் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. உணவு டெலிவரி செய்பவரின் ஒரு நாளை மையமாக வைத்து 'ஸ்வீட் பிரியாணி' குறும்படம் எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்றதோடு பல விருதுகளையும் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)