நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை!

Koozhangal

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தும் நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கூழாங்கல். முதலில் வேறு ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்த இப்படம், பின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டது. இப்படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்று வந்த நிலையில், தற்போது இந்தியா சார்பாக ஆஸ்கரில் பங்கேற்கும் படமாகத்தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கருக்கான இந்தியாவின் பரிந்துரை பட்டியலில் மொத்தம் 14 படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 15 பேர் கொண்ட தேர்வு குழுவினரால் கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கூழாங்கல் படக்குழுவினருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு திரைப்படம் கடந்த ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe