Skip to main content

படம் பார்த்தால் ஒரு பவுன் தங்கம் இலவசம் !

Published on 10/10/2018 | Edited on 11/10/2018
koothan

 

நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட்தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் 'கூத்தன்'. அறிமுக இயக்குனர் ஏ.எல் வெங்கி இயக்கியுள்ள இப்படத்தில் ராஜ்குமார், ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன் நாயகிகளாக அறிமுகமாகியுள்ளனர். மேலும் நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

 

 


சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதிய முறையில் தொடங்கிய தயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் பட பார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்துள்ளார்.  அதன்படி இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில் பட டிக்கெட்டின் நம்பரையும் ரசிகர்கள் தங்கள் போன் நம்பர், முகவரி ஆகியவற்றை எழுதி கூப்பன் பெட்டியில் போட வேண்டும். தமிழகம் முழுவதும் அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 'கூத்தன்' பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக 1பவுன் தங்கம் வீதம் 18 பவுன் பரிசாக அளிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூத்தன் பட பாடலால் மீம்ஸ்கள், வீடியோ மீம்ஸ் என ட்ரெண்டான டி.ஆர் !

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
tr

 

 

 

நீல்கிரிஸ் முருகன் தயாரிப்பில் ஏ.எல். வெங்கி இயக்கத்தில் அறிமுக நாயகன் ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கூத்தன்'. நாளை முதல் வெளியாக உள்ள இப்படத்தின் 'மங்கிஸ்தா கிங்கிஸ்தா' என்ற பாடலை டி.ராஜேந்தர் பாடியுள்ளார். பால்ஸ் ஜி இசையில் உருவாகியுள்ள இப்பாடல் டி.ஆர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த பாடலை வைத்து பல மீம்ஸ்கள், வீடியோ மீம்ஸ் ஆகியவை உருவாக்கி சமூக வலையதளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த பாடல் தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பிரேசில் பாடகி ஒருவர் இப்பாடலை பாடி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.