Advertisment

சிறந்த ஆவணப்படத் தொடர் விருது வென்ற ‘கூச முனுசாமி வீரப்பன்’

koose munisamy veerappan wins best documentry series award

தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பில் பிரபாவதி ஆர்.வி. தயாரிப்பில் வீரப்பன் நக்கீரனுக்கு பேசிய பிரத்யேக பேட்டிகளைக் கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மிமற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கியிருந்த இந்த சீரிஸிற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருந்தார்.

Advertisment

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த சீரிஸில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்ந்திருந்தனர்.

Advertisment

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த சீரிஸ் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் ரஜினி, சிம்பு, கார்த்திக் சுப்புராஜ், சேரன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் படக்குழுவைப் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், இந்த சீரிஸ் சிறந்த ஆவணத் தொடருக்கான எடிசன் விருது வென்றுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் நடந்த 16வது ஆண்டு எடிசன் விருது விழாவில், சிறந்த ஆவணத் தொடருக்கான எடிசன் விருதை இயக்குநர் மற்றும் நடிகர் பாரதிராஜா படக்குழுவினருக்கு வழங்கினார். அவரிடமிருந்து நக்கீரன் ஆசிரியர், பிரபாவதி, ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் மற்றும் ஷரத் ஜோதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்கள், வெப் தொடர்கள்உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Jeyachandra Hashmi Prabbhavathi RV
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe