Advertisment

வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’ - வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ட்ரைலர்!

Koose Munisamy Veerappan Documentary Series Trailer released

ஜீ5 நிறுவனம் தொடர்ச்சியாகத் தமிழில் திரைப்படங்களைத் தயாரிப்பதும், வெளியிடுவதுமாக உள்ளது. பல வெப்சீரியஸ்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய கிரைம் டாக்குமெண்டரி சீரிஸ் ஒன்றை அறிவித்துள்ளது.

Advertisment

இந்த டாக்குமெண்டரி சீரிஸின் டைட்டில் மற்றும் டிரைலரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘கூசமுனுசாமி வீரப்பன்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. இதனைபிரபாவதி ஆர்.வி.,ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். ஷரத் ஜோதி இயக்கியுள்ளார். தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி தயாரித்துள்ள இந்த சீரிஸிற்குசதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். மேலும் வீரப்பன் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரிஸிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

Advertisment

இத்தொடரில், நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் பா.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றியஅனுபவங்களையும், அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். மேலும் வீரப்பன் , “என்ன நடந்ததுனு என்னுடைய வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து சொல்றேன். தப்பு என்னுடையதா இல்ல அரசாங்கத்துதா..” என பேசும் வீடியோ டிரைலரில் இடம்பெற்றுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு சீரிஸ்க்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.

zee5 Tamil
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe