Skip to main content

“அதான் அடிச்சு தூக்குனேன்” - கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

Published on 01/12/2023 | Edited on 07/12/2023

 

Koose Munisamy Veerappan 2nd Trailer released

 

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரிஸிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. 

 

இத்தொடரின் ட்ரைலர் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இதை சூர்யா அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்ரைலர் பலரது கவனத்தை பெற்றது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

 

இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாவது ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதை சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரைலரில், நக்கீரன் ஆசிரியர், “காவிரி பிரச்சனையில் மனிதாபிமானத்துடன் நடந்துகிட்டது வீரப்பன் தான்... அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கிடையாது” என்கிறார். மேலும் வீரப்பன், “நான் வந்து பயங்ரவாதி அல்ல...அதாவது நியாயத்தை நிலைநாட்டுறேன்...அவ்வளவு தான்”, “இந்த மாதிரி கோழை வேலை செய்ய கூடாது அரசாங்கம்” என பேசும் ஒரிஜினல் வீடியோ இடம்பெற்றிருக்கிறது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறந்த ஆவணப்படத் தொடர் விருது வென்ற ‘கூச முனுசாமி வீரப்பன்’

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
koose munisamy veerappan wins best documentry series award

தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பில் பிரபாவதி ஆர்.வி. தயாரிப்பில் வீரப்பன் நக்கீரனுக்கு பேசிய பிரத்யேக பேட்டிகளைக் கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி மற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கியிருந்த இந்த சீரிஸிற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருந்தார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த சீரிஸில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்ந்திருந்தனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த சீரிஸ் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் ரஜினி, சிம்பு, கார்த்திக் சுப்புராஜ், சேரன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் படக்குழுவைப் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், இந்த சீரிஸ் சிறந்த ஆவணத் தொடருக்கான எடிசன் விருது வென்றுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் நடந்த 16வது ஆண்டு எடிசன் விருது விழாவில், சிறந்த ஆவணத் தொடருக்கான எடிசன் விருதை இயக்குநர் மற்றும் நடிகர் பாரதிராஜா படக்குழுவினருக்கு வழங்கினார். அவரிடமிருந்து நக்கீரன் ஆசிரியர், பிரபாவதி, ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் மற்றும் ஷரத் ஜோதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

“தவறு என நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் சில நியாயங்கள் உண்டு” - சேரன் பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
cheran about koose munisamy veerappan series

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, மற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்திருந்தார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியிருந்தது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருந்தது. 

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர்.

இந்த சீரிஸ் வெளியான சில நாட்கள் கழித்து, ஜீ5 ஓடிடி தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. பின்பு சீரிஸீன் முதல் எபிசோடை இலவசமாக பார்க்கலாம் என சலுகை அறிவித்தது. அடுத்து யூட்யூபில் முதல் எபிசோடை மட்டும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து உலகளவில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் பின்பு 125 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டது. இப்போது 150 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன், ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீரிஸை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள, எக்ஸ் பதிவில், “மிக நேர்த்தியான படைப்பு. மனிதனுக்கான பல்வேறு முகங்களை பதிவு செய்திருக்கிறது. தவறு என நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் சில நியாயங்கள் உண்டு. குறிப்பாக அதில் பெண்களின் உணர்வுகளை அவர்கள் சகிக்கமுடியாத வலிகளை கடந்தும் வாழ்க்கையை எதிர்கொண்டு நிற்கிற தன்மையை இயக்குநர், சம்பவத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட மனிதர்களின் முகங்களை பதிவு செய்தது என்னை ஈர்த்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புரட்சியாளர்கள் எப்படி அடக்குமுறைகளால் வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை அழகாக பதிவு செய்த இயக்குநருக்கு வாழ்த்துகள். இந்த வெப் டாக்யூ உருவாகக் காரணம் நக்கீரன் ஆசிரியர், தைரியமாக காட்டுக்குள் சென்று பதிவு செய்த வீடியோ. இந்தத் தொடர் உருவாக, ஒரு உண்மைக் காலம் தாண்டி இச்சமூகத்திற்கு செல்ல உதவியிருக்கிறது. அவருக்கும் பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.