/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/285_4.jpg)
கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில்‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ‘பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, பூவையார், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகபணியாற்றியசபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் ஆகிய இருவரும் இப்படத்தை இயக்கியுள்ளனர்.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். நகைச்சுவை கலந்து அனைத்து தரப்பினரையும் கவரும் படி உருவாகியுள்ள‘கூகுள் குட்டப்பா’படத்தின் ட்ரைலர்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)