/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2_165.jpg)
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். கலையரசன், சூரி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட போதிலும், கரோனா பரவல் காரணமாகதிரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், ‘கொம்புவச்ச சிங்கம்டா’ திரைப்படம் வரும் நவம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர். மகன் திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)