Advertisment

கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய திரைப் பிரபலங்களின் பிரிவு!

kollywood divorced couples list

‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு...’ என்ற பாடல் வரிகளுக்கு உதாரணமாக பல்வேறு தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு திரைப்- பிரபலங்களும் விதி விலக்கல்ல. ஆனால் சில ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொள்வர் சிலர் திருமணத்திற்கு பிறகு காதலை கொட்டுவர். இதில் சிலர் ரசிகர்களுக்கு விருப்ப ஜோடிகளாகவும் இருக்கின்றனர். இப்படி இருக்கையில் அவர்கள் திடீரென தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்து திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தற்போது ஏ.ஆர் ரஹ்மான் - சாய்ரா பானு பிரிவு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

சமீப காலமாக தமிழ் சினிமாவில் பிரபலங்களின் பிரிவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தாண்டு மட்டும் யாரும் எதிர்பாராத விதமாக ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி என இரண்டு நட்சத்திர ஜோடிகள் பிரிந்தனர். இந்த நிலையில் இதுவரை தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்குள்ளான திரை பிரபலங்களின் பிரிவு பட்டியல் பின்வருமாறு...

Advertisment

kollywood divorced couples list

ஏ.எல்.விஜய் - அமலாபால்; இருவரும் காதலித்து 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக 2016ஆம் ஆண்டு பிரிந்தனர். இவர்களது திருமண வாழ்க்கை இரண்டே ஆண்டுக்குள் முடிவுக்கு வந்தது. இருவரும் தற்போது வெவ்வெறு நபருடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

kollywood divorced couples list

சமந்தா - நாக சைத்யன்யா; இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 2021ஆம் ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தனர். இப்போது இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

kollywood divorced couples list

தனுஷ் - ஐஸ்வர்யா; இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 2022ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பின்பு விவகாரத்துக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர். வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவர்களது திருமண வாழ்க்கை 18 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்தது.

kollywood divorced couples list

ஜி.வி. பிரகாஷ் குமார் - சைந்தவி; இருவரும் காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்பு யாரும் எதிர்பாராத விதமாக இந்தாண்டு மே மாதம் இருவரும் தங்கள் பிரிவை அறிவித்தனர். இவர்களது திருமண வாழ்க்கை 11 வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்தது.

kollywood divorced couples list

ஜெயம் ரவி - ஆர்த்தி; இருவரும் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்பு கடந்த செப்டம்பரில் ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.பின்பு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இவர்களது திருமண வாழ்க்கை 15 வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்தது.

kollywood divorced couples list

ஏ.ஆர் ரஹ்மான் - சாய்ரா பானு; இருவரும் 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இப்போது இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர். இவர்களது திருமண வாழ்க்கை 29ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

divorce celebrity marriages tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe