Advertisment

கோலிவுட் முதல் பாலிவுட் வரை ; புஷ்கர் காயத்ரி படைப்பிற்கு குவியும் பாராட்டுக்கள்

From Kollywood to Bollywood; compliments to the work of Pushkar Gayatri

தமிழ் திரையுலகில்படங்களைதாண்டி தற்போதுவெப்சீரிஸ்களுக்கானவரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள்புஷ்கர்-காயத்ரி எழுதி, தயாரித்துள்ளசீரிஸ்'சுழல்'. பிரம்மா மற்றும்அருண்சரண்இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்தசீரிஸில்கதிர், ஐஸ்வர்யாராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தசீரிஸின்முதல்சீசனான'சுழல்: திவோர்டெக்ஸ்', சில தினங்களுக்கு முன்புஅமேசான்ப்ரைம்ஓடிடிதளத்தில் வெளியானது. இந்தவெப்சீரிஸைபார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தனுஷ் தனதுபாராட்டைதெரிவித்திருந்தார்.

Advertisment

அந்த வகையில் நடிகை சமந்தா, இசையமைப்பாளர்அனிருத், இயக்குநர்லோகேஷ்கனகராஜ் உள்ளிட்ட பலரும் இந்த 'சுழல்: திவோர்டெக்ஸ்'வெப்சீரிஸிற்குபாராட்டு தெரிவித்துள்ளனர். இயக்குநர்லோகேஷ்கனகராஜ் தனதுட்விட்டர்பக்கத்தில், " சுழல், ஒருவிஷுவல்ட்ரீட்மற்றும் ஒருட்ரெண்ட்செட்டிங்வெப்சீரிஸ்.புஷ்கர்அண்ணா மற்றும் காயத்ரி அக்கா இருவருக்கும் வாழ்த்துக்கள். கதிர்சக்கரைகதாபாத்திரத்திலும், ஸ்ரேயா ரெட்டிரெஜினாவாகவும், ஐஸ்வர்யாராஜேஷ்நந்தினியாகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்"எனக்குறிப்பிட்டு சாம் சி. எஸ். உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாகஅனிருத்தனது சமூக வலைத்தள பக்கத்தில், ''சுழல்: திவோர்டெக்ஸ்தொடரில் என்னுடைய சகோதரர் சாம் சி.எஸ். அவர்களின்டைட்டில்பாடல் வியக்க வைத்தது. பின்னணி இசையும்பரபரப்பாககதையோட்டத்துடன் இணைந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.''எனத்தெரிவித்துள்ளார். மேலும் பாலிவுட்திரைபிரபலங்கள்ஹன்சல்மேத்தா,அனுராக்காஷ்யப், நடிகை வித்யா பாலன், நடிகைபூமிகாபட்நாகர், நடிகர்விக்ராந்த்மாஸேஉள்ளிட்ட பலரும் தங்களதுவாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளனர்.

samantha anirudh lokesh kanagaraj pushkar gayathri Suzhal - web series
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe