Advertisment

இயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார்.

Advertisment

nayanthara

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர், நடிகை நயன்தாரா இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குனர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகம் பிரபலங்களே கலந்துகொண்டார்கள்.

இந்த படம் இன்னும் முடிவடையவே இல்லை, எடுக்க வேண்டிய காட்சிகள் இன்னும் இருக்கின்றன. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஒத்துவராததால் இந்த படம் பாதிலேயே ட்ராபாகிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் நேற்று இந்த ட்ரைலர் வெளியிட்ட பின்னர் யுவன் ஷங்கர்ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை. என் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்று பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த படம் தொடங்குவதற்கு முன்பு யுவன் ஷங்கர்ராஜாதான் இசை என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சிலர் படம் தொடங்குவதற்கு முன்பிருந்த தயாரிப்பாளரிடமிருந்து மாறிதற்போது வேறு ஒரு தயாரிப்பாளரிடம் படம் வந்திருக்கிறது. அந்த குழப்பம் கூட இருக்கலாம் என்று சொல்கின்றனர். எது என்னவோ இந்த படம் தொடங்கியது முதல் தற்போது வரை சர்ச்சையிலேயே சிக்கித் தவிக்கிறது.

kolaiyuthir kalam Nayanthara yuvanshankarraja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe