விக்னேஷ் சிவன் மீது வழக்கு???

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சையாக பேசினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

vignesh

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ராதாரவி பேசியதை எதிர்த்து ட்வீட் செய்திருந்தார் விக்னேஷ் சிவன். “இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்ததால் கொலையுதிர் காலம் படத்தை வாங்க இருந்த விநியோகஸ்தர்கள் யாரும் தற்போது முன்வரவில்லை என்றும். ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு பின் சாட்டிலைட் ரைட்ஸ் பெற்றுக்கொள்வதாக பெரிய நிறுவனம் ஒன்று அறிவித்திருந்ததும் இதனால் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீது இயக்குனர் சக்ரி டொலட்டி வழக்கு தொடர இருப்பதாகவும், இதனால் ஆன நஷ்டத்திற்கு விக்னேஷ் சிவனே பொறுப்பேற்க வேண்டும் என படக்குழு கோரவுள்ளது. இந்த வழக்கு குறித்து படக்குழு ஆலோசனையில் இறங்கியுள்ளதாம்.

kolaiyuthir kalam Nayanthara vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe