கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் கடந்த மாதத்திலிருந்து கரோனா பாதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் பெங்காலி பட நடிகை கோயல் மாலிக், தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அம்மா, அப்பா, ரானே மற்றும் எனக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் பாசிடிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
கோயல் மாலிக்கின் தந்தை ரஞ்சித் மாலிக்கும் நடிகர் ஆவார். கோயலின் கணவர் நிஸ்பால் சிங் தயாரிப்பாளராக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குகடந்த மே 5ஆம் தேதிதான் ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.