koduva first look released

Advertisment

'சென்னை28’, 'சத்தம் போடாதே', ராமன் தேடிய சீதை' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் நிதின் சத்யா. கடைசியாக 2019-ல் ஆரவ் நடிப்பில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தயாரிப்பில் இதுவரை 'ஜருகண்டி' மற்றும் 'லாக்கப்' போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நிதின் சத்யா கதாநாயகனாக நடிக்கும் படம் 'கொடுவா'.துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் 'கொடுவா' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின்கவனத்தை பெற்ற நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக்போஸ்டர் வெளியாகியுள்ளது.படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தநிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.